பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தர்பூசணி செய்கையில் ஈடுபட்டவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பாலர்சேனை பகுதியில் தர்பூசணி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கையின் அறுவடை காலம் முடிவடைந்துள்ளதால் தமது செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
60 நாட்களில் அறுவடை செய்யும் தமது செய்கை காலம் மேலதிகமாக சுமார் ஒரு மாதம் இந்த பயணத்தடையால் கடந்ததால் தாம் இந் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தாம் சுமார் 05ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் இந்த தர்பூசணி செய்கையை செய்துள்ளதாகவும் தமது செய்கையின் அறுவடைக்காலம் முடிந்துள்ளதால் தாம் பயிரிட்ட செய்கை முற்றாக அழிவடைந்து தாம் நஸ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக குறித்த விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடையே தமது இந்த பெருநஸ்ரத்திற்கு காரணம் என குற்றம் சாட்டும் விவசாயிகள் அரசாங்கம் தமது பிரச்சிணை தொடர்பில் கவணம் செலுத்த வேண்டும் எனவும் தமக்கான நஸ்டஈட்டையேனும் தமக்கு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோருகின்றனர்.
பயணத்தடை காரணமாக தாம் குறித்த செய்கையினை அறுவடை செய்து தம்புள்ளை, கொழும்பு போன்ற இடங்களுக்கு பொருளாதார மத்திய இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தம்மை தேடிவந்து கொள்வணவு செய்யும் வியாபாரிகளும் தற்போது வருவதில்லை எனவும் இதனால் அறுவடைக்காலம் முடிவடைந்து தமது செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வங்கியில் கடன் பெற்றுத்தான் இந்த செய்கையை செய்ததாகவும் தற்போது இந் நிலை ஏற்பட்டுள்ளதால் வங்கிக்கடனை மீண்டும் திருப்பச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தாம் செய்கையிட்டுள்ள சுமார் 05 ஏக்கருக்கு மேற்பட்ட தர்பூசணி செய்கை முற்றாக நாசமாயுள்ளதாகவும் விவயாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.