இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த தடை 7ஆம் திகதி நீக்கப்படாது என்றும் எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சற்றுமுன் இந்த தகவலை இராணுவத்தளபதி வெளியிட்டார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் தனிப்பட்ட விடுமுறைகளும் 15ஆம் திகதி வரை இரத்துச்செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது