மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று 02-06-2021ம் திகதி செவ்வாய்க்கிழமை(66) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 08 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள், பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்தவர்கள், சட்டவிதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என அறுபத்தாறு (66) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் இருபத்தேழு 27 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றது.
குறித்த அன்டிஜன் பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை காவற்தறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.