கொரோனா தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து


கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, மட்டக்களப்பு- பெரியகல்லாறு பிரதான வீதியில் வைத்து எதிரே வந்த அரச திணைக்கள பிக்கவுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

கம்பஹாவில் இருந்து அம்பாறை நோக்கி, கொரோனா நோயாளர்கள் 27 பேரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தொன்றே, இவ்வாறு இன்று21-06-2021ஆம் திகதி (திங்கட்கிழமை) விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் தனியார் பேரூந்தும் திணைக்கள பிக்கப் வாகனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை