பிரதமருக்கு இணையான அதிகாரத்துடன் களமிறங்கும் பசில்


தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பசில் ராஜபக்ஷ என ராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சிற்கு வேலைத்திட்டம் ஒன்று தயாரித்து அதனை கண்கானிப்பதும் அவர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்து அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உறுப்பினர்கள் பல பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து அமைச்சுக்களிலும் தலையிட்டு கட்டுப்படுத்த கூடிய அதிகாரம் கொண்ட அமைச்சு பதவி ஒன்றே பசில் ராஜபக்ஷவுக்கு கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் பசில் ராஜபக்ஷவினால் பெரிய வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு நுழைவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை