மட்டு-குடியிருப்பு பகுதியில் முதலை புகுந்துள்ளது.


மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா - 03 சவேரியார்புரம் பகுதியில், முதலை புகுந்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று23-06-2021ஆம் திகதி காலை, கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குளேயே முதலை புகுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து, பிரதேச மக்கள் அறிவித்ததனைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று முதலையினை மீட்டுள்ளனர்.

அத்துடன் உன்னிச்சை காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவித்துள்ளனர். குறித்த முதலை சுமார் 6 அடி நீளமானது என குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
புதியது பழையவை