கோதுமை மாவின் விலை அதிகரிப்பு


பிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை இன்று 01-06-2021ம் திகதி முதல் 4 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொத்து ரொட்டி, தேங்காய் ரொட்டி, கிழங்கு ரொட்டி, முட்டை ரொட்டி, புட்டு, இடியப்பம் மற்றும் பராட்டா உள்ளிட்ட உணவுகள் இந்த கோதுமை மாவின் மூலமே தயாரிக்கப்படுகின்றன.

நுகர்வோரும் இந்த உணவுகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

50 கிலோ கிராம் கோதுமை மாவின் விலையானது 2 ஆயிரத்து 150 ரூபாயாக காணப்பட்டதுடன் புதிய விலையானது 2 ஆயிரத்து 350 ரூபாயாக அதிகரித்துள்ளது.
புதியது பழையவை