தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைபினருக்கும் இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பேச்சுவார்த்தை திகதி நிர்ணயம் இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்தரையாடும் நோக்கில், ஜனாதிபதியுடன் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவிருந்தது
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, இதன்போது கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எமது கெப்பிடல் செய்திப் பிரிவுக்கு குறிப்பிட்டார்.
அத்துடன், இதற்கான காரணம் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை