தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வரவேற்கிறோம்


தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வரவேற்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி என்பவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர், அவர் இன. மத பேதமில்லாது இருக்கவேண்டும், அண்மையில் கொலை குற்றவாளிகளை விடுவித்துள்ள ஜனாதிபதி ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (26)மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இக் கருத்தினை தெரிவித்தார்.
புதியது பழையவை