வைத்தியசாலையிலிருந்து கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்


கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பன்வில, ஹில்வி வீதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
தாதியர்கள் நேற்று (26) இரவு 7.45 மணியளவில் தொற்றாளரைப் பார்வையிட வந்தபோதே அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

தொற்றாளரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதியது பழையவை