மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!


மட்டக்களப்பு – கரடியனாறு – மயிலவெட்டுவான் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீரக்கட்டு ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை