மது என நினைத்து பெட்ரி அமிலத்தை அருந்தியவர் மரணம்!


லொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என்றும் இவர் வாகனங்கள் திருத்துமிடம் ஒன்றின் உரிமையாளர் என்றும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் வாகன திருத்துமிடத்துக்கு லொறியொன்றின் பெட்ரி அமிலத்தை மாற்றுவதற்கு வருகைத் தந்த மூவருடன், இந்த நபர் மதுபானம் அருந்தியுள்ளார்.

இதன்போது தவறுதலாக பெட்ரியிலுள்ள அமிலத்தை பருகி உயிரிழந்துள்ளார்.

லொறியுடன் வாகன திருத்துமிடத்துக்கு வந்த நபர்களிடம் சட்டவிரோத மதுபான போத்தல் ஒன்றும் அமிலம் 2 போத்தலும் காணப்பட்டுள்ளதுடன், மதுபோதையில் அமிலத்தை பருகியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புதியது பழையவை