இலங்கையின் தம்புள்ளை பொருளாதார மத்தியச் சந்தையில் மரக்கறிகளின் விலை இன்று பண்மடங்கு அதிகரித்துக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோகிராம் போஞ்சி 208-300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பச்சைமிளகாய் 150-200 ரூபாய் வரையிலும் லீக்ஸ் 140-160 வரையிலும் சிறகவரை 150-160 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பாகற்காய் 280-300 ரூபாய் வரையிலும் கரட் 140-150 ரூபாய் வரையிலும் பூசணிக்காய் 35- 45 ரூபாய் வரையிலும் கறிமிளகாய் 280-300 ரூபாய் வரையிலும் வெள்ளரிக்காய் 80 – 90 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை கத்தரிக்காய் 140-150 வரையிலும், பயத்தங்காய் 150-160 ரூபாய் வரையிலும், புடலங்காய் 80 – 100 ரூபாய் வரையிலும், வரிபீர்க்கங்காய் 120-140 ரூபாய் வரையிலும், சுண்டைக்காய் 200-220 ரூபாய் வரையிலும், நோக்கல் 90-110 ரூபாய் வரையிலும், முருங்கைக்காய் 300 ரூபாய்க்கும், கெக்கிரி 100 – 105 ரூபாய் வரையிலும் விற்பனைச் செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.