மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள கொவிட் 19 உத்தியாகத்தர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று 15-06-2021ஆம் திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எட்டாவது நாளாக இன்று மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உத்தியாகத்தர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டன.