வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று



வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நாட்டில் நேற்று 1,825 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 1,801 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 51 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 49 ஆக உயர்வடைந்துள்ளது.


இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 905 ஆக உயந்துள்ளன
புதியது பழையவை