மட்டு-போரதீவுப்பற்று பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்


அவர்களுக்கு வாகனம்! மக்களுக்கு பட்டினி!! எனும் தலைப்பிலான சுவரொட்டிகள் மட்டக்களப்பில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் குறிப்பாக போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அந்த சுவரொட்டிகளில் எரிபொருள் விலைக்கு, பொருட்கள் விலைக்கு நிவாரணம் கொடு, வைரஸிக்குள் மறைந்து மக்கள் சொத்தை விற்றுத் தின்பதை நிறுத்து எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு முன்னிலை சோஷலிஸ கட்சி உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

புதியது பழையவை