நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவுகூர்ந்திருந்தால் அது தொடர்பில் சபாநாயகரே நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பு கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று(29) பகல் நடந்தது.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அரசாங்கப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.