மட்டக்களப்பில் இரண்டாவது நாளாகவும் கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு


இரண்டாவது நாளாக சினோபாரமா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று 09-06-2021ஆம் திகதி மேற்கொள்ளப்படுகின்றன.
இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாக பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம் ..கல்லடி விபுலானந்தர் வித்தியாலயம் , நாவற்குடா சாரதா வித்தியாலயங்களில் முதியோர்களுக்கான சினோபாரமா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டத்திற்கான கொவிட் – 19 சினோபாரமா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இன்று முன்னெடுக்கப்படுகின்ற தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மாவட்ட அரசாங்க அதிபர் .கே .கருணாகரன் , பிரதேச செயலாளர் வி ,வாசுதேவன் , மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜர் ஜெனறல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.ஹெட்டியாராச்சி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்


புதியது பழையவை