தொழில் திணைக்களத்திற்குரிய அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொழில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
தொழில் திணைக்களம் மூடப்படும் காலப்பகுதியில் தொழில் சட்டங்களுக்களுக்கு அமைவான எந்தவொரு விடயம் தொடர்பான எழுத்து மூலமான முறைப்பாடுகள் அல்லது எழுத்து மூலமான விசாரணையை தாங்கள் பணிபுரியும் அல்லது பணிபுரிந்த நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள தொழில் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.