மீண்டும் அதிகாரியின் அராஜகம்-அதிகாரிகள் அலுவலகம் உடைத்து அடாவடி


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நொச்சுமுனை கிராம உத்தியோகத்தர் காரியாலயம் உடைக்கப்பட்டு பலவந்தமாக பிறிதொருவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அராஜகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

குறித்த பகுதி கிராமசேவையாளரை பிரதேசசெயலாளர் விசாரணை செய்வதற்காக அலுவலகத்தோடு இணைப்பு செய்திருந்தார் ஆனாலும் அந்த கிராமசேவையாளருக்கு இதுவரை எந்த விசாரணையும் இடம்பெறாது கிராமசேவையாளர் பிரதேச செயலகத்திலே இருந்துள்ளார்

ஆனால் அக்கிராமத்தில் கொவிட் சூழ்நிலை மற்றும் வேறு தேவைகளுக்காக கிராமசேவையாளரை தேடிசசென்று பலரும் திரும்பிய நிலையில் இதனை அறிந்த அக்கிராம பிரமுகர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர் ஒருவரை தொடர்பு கொண்ட போது

குறித்த ஊடகவியலாளர் இரண்டு நிமிடத்தில் எடுக்கின்றேன் என தொடர்பை துண்டித்து விட்டு பிரதேச செயலாளரிடம் சம்பவத்தை கூறி கடந்து சென்றுள்ளார்

சம்வம் பூதாகரமாக ஊடகத்தில் வந்தால் தனதுஅடாவடி தெரிந்து விடும் என்பதனை உணர்ந்த பிரதேசசெயலாளர் உடனடியாக. தனது சகாக்களுடன் நொச்சுமுனை கிராமஉத்தியோகத்தர் காரியாலயத்திற்கு சென்று பூட்டை உடைத்து
அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை.பிறிதொரு கிராமசேவையாளரான மதன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளாராம் இந்தக் கிராம உத்தியோகத்தருக்கு மூன்று கிராமங்களில் கடைமையாற்றுபவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது இப்படி ஆளணி இருக்கும் போது எப்படி பிரதேசசெயலாளர் குறித்த பகுதியில் கடயைாற்றும் கிராம சேவையாளருக்கு அறிவிக்காமல் அலுவலகத்தை உடைக்க முடியும்.

அதிகாரிகளின் அராஜகத்தை எப்படியும்.உத்தியோகத்தர்கள் மீது கட்டவிழ்த்தப்படுவது எந்த விதத்தில்.நியாயம் இச் செயல் மிகவும் கண்டிக்கத் தக்க விடயம் இதற்கு அரசாங்க அதிபர் மற்றும் கிராமஉத்தியோகத்தர்களின் சங்கம் என்ன நடவடிக்கையினை இது வரை மேற்கொண்டுள்ளது

அதுமட்டு மன்றி மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் சிலர்அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நல்லா முதுகு சொறிந்து விடுவதாக தகவலும் வந்து கொண்டிருக்கிறது

கிராமசேவையாளரை பிரதேச செயலகத்தில் விசாரணைக்கு என்று அழைத்து விட்டு அதற்கான விசாரணைகள மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு செய்து வருவதில் பல சந்தேகம் உள்ளது .

இதில்....

சத்துருக்கொண்டான் காணியினை திசைதிருப்பும் நோக்கமா?

கல்லடி வேலூர் சவக்காலைக்கு பக்கத்தில அமெரிக்கன் பிரஜை ஒருவருக்கு வழங்கிய காணி விடயத்தை திசைதிருப்பும் நோக்கமா.?

அல்லது தன்னைப்பற்றிய சம்பவங்கள் வெளிவருகின்றது அதனை தடுக்கும் நோக்கமா?

கிராமசேவையாளர் மீது ஆதாரபூர்வமற்ற குற்றங்களை சுமத்தி தமது சுயநலத்தை சாதிக்கத் துடிக்கும் பிரதேசசெயலாளரின் வங்குறோத்து தனம் மக்கள் முன் நிச்சயம் ஒருநாள் வெளிவரும்

ஊடகங்கள் பாதிக்கப்பட்ட கிராம சேவையாளரின் கருத்தை இதுவரை பதிவு செய்யாதமை பலத்த சந்தேகம் உள்ளது. இந்த விடயம் யார்யார் ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்ற விபரமும் உள்ளது...
புதியது பழையவை