உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு நகர் ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள  செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன காரியாலயத்தில் உயிரிழந்த நிலையில் வாய் பேச முடியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை 05-06-2021ஆம் திகதி மீட்டகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்தவரும் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கடமையாற்றிவரும் 49 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தையான செபமாலை ஜெயகாந்தன் குருஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

குறித்த நபர் குறித்த நிறுவன காரியாலயத்தில் தங்கியிருந்து அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கடமைக்கு சென்று வருவதாகவும் இரவில் இங்கு பாதுகாவலராகவும் செயற்பட்டுவரும் இவர் வழமைபோல நேற்று வெள்ளிக்கிழமை கடமையில் இருந்து திரும்பி அங்கு இரவு உணவை உண்டபின் காரியாலய கதவைப் பூட்டிவிட்டு  படுக்கைக்கு சென்றுள்ளார்.

சம்பவதினமான இன்று காலை 11 மணி ஆகியும் காரியாலய கதவு திறக்கப்படாததையடுத்து 
கதவை உடைத்து உள் சென்றபோது அங்கு அவர் படுத்த படுக்கையில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு காவற்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

புதியது பழையவை