திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இனந்தெரியாதோரால் குடிசை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு(24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்போபுர பகுதியில் அமைந்துள்ள வயலில் உள்ள குடிசைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் தீ காயங்களுக்குள்ளான நிலையில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த டபிள்யு. ஜெயத்திலக்க 46 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.