மிகவும் கஸ்டத்திற்குள்ளாகியுள்ள மக்களுக்கு-ஊடகவியலாளர்கள் உதவி


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பயணத்தடை காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மினுமினுத்தவெளி, அக்குறானை கிராம மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக தொடர்ச்சியாக ஒரு மாதங்களுக்கு மேலாக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்கள் தொழில் முடக்கம் காரணமாக நாளாந்த வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மினுமினுத்தவெளி, அக்குறானை கிராம மக்களுக்கு இது வரை எந்த வித நிவாரணமும் கிடைக்காத நிலையில் கஷ்டப்பட்டு வந்த நிலையில். லண்டனில் உள்ள ஸ்ரீலங்கன் குடும்ப அறக்கட்டளை அமைப்பினரும், இலண்டன் தேசத்தின் பாலம் அமைப்பினரும் இணைந்து 120 குடும்பங்களுக்கான 1500 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஊடாக வழங்கி வைத்துள்ளனர்.

இவற்றினை குறித்த பிரதேச மக்களுக்கு வழங்கும் நிகழ்வு கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிரான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யோகராஜா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் எஸ்.நிலாந்தன்,உபசெயலாளர் சுபஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அக்குறானை கிராமத்தில் உள்ள 75 குடும்பங்களுக்கான உதவிகளை இலண்டனில் உள்ள இலங்கை குடும்ப நல்வாழ்வு அமைப்பு வழங்கி வைத்ததுடன், மினுமினுத்தவெளி கிராமத்தில் வசிக்கும் 45 குடும்பங்களுக்கான உதவிகளை இலண்டனில் உள்ள தேசத்தின் பாலம் அமைப்பினரும் வழங்கிவைத்தனர்.


புதியது பழையவை