களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய பிரிவில் ஒருபகுதி முடக்கம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

அதன்படி பெரியகல்லாறு மூன்றாம் இரண்டாம் வட்டார பிரிவுகளின் பல பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நா.மயூரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினமும் நேற்றும் குறித்த பகுதியில் 43 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தொற்று உறுதியானவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பானவர்களும் தன்மைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பயணத்தடையினை அரசாங்கம் அறிவித்துள்ளபோதிலும் மக்களின் உதாசீனம் காரணமாக தொற்று அதிகரித்துச்செல்லும் நிலையுருவாகியுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை