செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்



மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒன்றுகூடியவர்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை நிலவிவருகின்றது.
வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடிய நிலையில் குறித்த துப்பாக்கிசூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பிவருகின்றனர்.

அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது இராஜாங்க அமைச்சரின் கட்டவுட்கள் எரிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளரும் அச்சுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





புதியது பழையவை