நாடு முழுவதும் எழுமாறான PCR பரிசோதனைகள்


கொரோனா வைரஸ் சமூக பரவலடைந்துள்ளதா என்பதைக் கண்டறியும் நோக்கில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் எழுமாறாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை அளவில் கொரோனா வைரஸ் சமூக பரவலடைந்துள்ளதா என்பது தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டின் மூலம் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளனவா என்பது குறித்தும் இதன்மூலம் அறிந்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை