12 கிலோ கிராம் ஹஷீஷ் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மலபே பகுதியில் ஹஷீஷ் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினால் நேற்று மேற்கொள்ளப்பாட்ட சோதனை நவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் மலபே – சுசிலாராம  பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 12 கிலோ கிராம் ஹஷீஷ் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதியது பழையவை