கிளிநொச்சி- ஏ9 வீதியில் விபத்து


கிளிநொச்சி மாவட்டத்தில், ஏ9 வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தென் பகுதியை நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமும், அவ்வீதியில் வடக்கு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விபத்திற்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

அதனையடுத்து, படுகாயமடைந்த இளைஞர், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், கிளிநொச்சி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை