கொவிட்-19 ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மட்டக்களப்பில்


சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் மற்றும் பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் ஆகியோர் இணை தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் அதிகரித்துள்ள கொவிட் தொற்று , தொற்றினை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாமாங்கம் மற்றும் மஞ்சந்தொடுவாய் கிராம சேவையாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவேண்டிய சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கடந்த மே மாதத்தினை விட ஜூன் மாதம் அதிகரித்துள்ள கொவிட் தொற்றாளர்கள் தொடர்பாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் வழங்குவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இக்குழுக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் , வைத்திய அதிகாரி கே .கிரிசுதன் , உதவி பிரதேச செயலாளர் ஜி .அருணன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சுதர்சன் ,மாநகர சபை பிரதி ஆணையாளர் உ .சிவராஜா ,மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் வி .விஜேகுமார் உட்பட மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை