கொவிட் மரண வீதத்தில் வடக்கு, கிழக்கு -குறைவான எண்ணிகையில் பதிவு


இலங்கையில் கோவிட் தொற்றினால் அதிகமானோர் உயிரிழக்கும் நிலையில் வடக்கு, கிழக்கில் குறைவான எண்ணிகையில் பதிவு செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் வடக்கு, கிழக்கில் உள்ள சுகாதார துறையினரின் செயற்பாடு எனவும், அவர்களை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் சிகிச்சை நிலையங்களை திறக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் கோவிட் தொற்றாளர்களில் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்கான கோவிட் சிகிச்சை நிலையம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இன்று 02-07-2021ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கருத்துரைக்கையில், இலங்கை அரசாங்கம் தடுப்பூசிகளை பெற்று அனைவருக்கும் வழங்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்தியுள்ளது. அது தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.புதியது பழையவை