ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான இரண்டு விசேட விமானம் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று 11-07-2021 ஆம் திகதி அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள sinopharm கொரோனா தடுப்பூசிகள் விமான நிலைய களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த தடுப்பூசிகள் அரச மருந்தக கூட்டுத்தாபனத்திடன் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.