யாழ்ப்பாணம் உட்பட 3 மாவட்டங்களில் 4 பிரதேசங்கள் முடக்கம்!


நாட்டில் கொரோனாவின் தீவிரத்தால் மேலும் சில பிரதேசங்கள் இன்று 01-07-2021ஆம் திகதி காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் கிராம சேவகர் பிரிவில் கள்ளித்தெரு மற்றும் கல்வந்தாழ்வு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதுஹம்பல மேற்கு கிராம சேவகர் பிரிவில் வேலமத பரணகம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேகவர் பிரிவின் மத்திய பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
புதியது பழையவை