இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 82ஆவது அகவையை முன்னிட்டு பழைய நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதன்போது இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன், பிரதமரின் பெருந்தோட்டங்களுகான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.


