ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட நால்வர் மீண்டும் நீதிமன்றத்தில்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்கள், நேற்றுமுன்தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, 48 மணித்தியாலங்களுக்குத் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய, ரிஷாத் பதியுதீனின் மனைவியிடம் கிருலப்பனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதுடன், அவரின் தந்தை, மற்றும் தரகர் ஆகியோரிடம் பொரளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

அத்துடன், ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 22 வயதான மற்றுமொரு யுவதி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீனின் மைத்துனரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேநேரம், குறித்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தொடர்பிலும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பணம் முன்வைக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை