தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருகும, தம்புத்தேகம பிரதேசத்தில், 9 வயது சிறுவனொருவர் சுமார் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகம குருகும பிரதேசத்தைச் சேர்ந்த சமரி பிரசாத் ரத்னாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்ருந்த நிலையில், விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படும் வரும் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சுமார் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்தே சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்ததப் போதிலும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
