மது போதையில் வந்த இளைஞர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் சிலர் தாக்கியதில் பெண் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் வந்த ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மீது சரமாரியாக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஈச்சங்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மது மற்றும் போதைக்கு அடிமையான குறித்த இளைஞர்கள் அப் பகுதியில் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வளர்ந்துவரும் இளம் சமுதாயம் இவ்வாறு கெட்டு தாம் சீரழிவது மட்டுமல்லாது தமது சமூகத்தையும் சீரழிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

புதியது பழையவை