மட்டு-டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்


டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்கக் கோரி இன்று(20) நண்பகல் 12 மணி முதல் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புதியது பழையவை