கதிர்காமம் முருகன் கோவில் திருவிழாவில் பங்கேற்ற நடனக்குழுவினருக்கு கொரோனா தொற்று



கதிர்காமம் முருகன் கோவிலின் வருடாந்தத் திருவிழாவில் பங்கேற்ற நடனக் குழுவினரில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

காலி பிரசேத்திலுள்ள குரு கெதர ஓய்வு மண்டபத்தில் தங்கியிருந்த நடனக் குழுவில் 11 பேருக்கும் மாத்தறை பிரதேசத்தில் தங்கியுள்ள நால்வருக்குமே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடன்குழுக்களின் அங்கத்தவர்களுக்கு நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையிலேயே 15 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான நடனக் கலைஞர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை