ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் ஒடுக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர நிராகரித்துள்ளார்.
மேலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார தேவைகளிற்காகவே கைதுகள் இடம்பெறுகின்றன அரசியல் நோக்கங்களிற்காக இல்லை எனவும் எச்சரித்தார்..
சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் காலத்திற்கு காலம் சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகின்றார்,
சில நாட்களிற்கு முன்னர் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களை தடை செய்தார். இந்த உத்தரவுக்கு அமையவே கைதுகள் இடம்பெறுவதாகவும், பொலிஸார் மீது எந்த குற்றமும் இல்லை எனவும் அமைச்சர் விளக்கினார்.