நாடாளுமன்றத்தில் ஆசனத்தை இழந்த பவித்ரா வன்னியாராச்சி


அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று(08) நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றப் பின்னர், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனம் பறி போயுள்ளது.

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றத்தை அடுத்து நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் முன் வரிசையில் அவருக்கு 9 வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த ஆசனம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுகாதார அமைச்சருக்கு 10வது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஆளும் கட்சியின் முன்வரிசை அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சிக்கு முன்வரிசையில் இருந்து பின்வரிசைக்கு செல்ல நேரிட்டுள்ளது.
புதியது பழையவை