தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற- மருத்துவ தாதி


திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது

ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வந்த சேருநுவர- ஆர்,பி -3 பகுதியைச் சேர்ந்த ஜீ.ஏ.சீ.மனோகரி (37வயது) என தெரியவருகின்றது.

கணவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்ற நிலையில் தீ மூட்டிக் கொண்ட தாதிய உத்தியோகத்தர் தற்பொழுது ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வருவதாகவும் குடும்பத்தகராறு காரணமாகவே தனக்குத் தானே தீ மூட்டி கொண்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த தாதிய உத்தியோகத்தர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

தீ மூட்டியமைக்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை