ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண்ணுக்கு நடந்துள்ள பாலியல் கொடுமை


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு 2015 - 2019 காலப்பகுதியில் வேலைக்காக சென்றிருந்த 22 வயதுப் பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.

ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த 22 வயதான பெண் ஒருவரை ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து 44 வயதான மதவாச்சி பகுதியைச் சேர்ந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

22 வயதான யுவதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட்டின் வீட்டில் தீக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை