பாடசாலை மாணவரும் தமிழரின் பிள்ளைகளும் பயங்கரவாதிகளா?


முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 05-07-2021ஆம் திகதி  காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1580 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் சுகாதார நடைமுறைகளை பேணி உறவுகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

எங்கள் உறவுகளை எங்கே மறைத்து வைத்தாய் ?, நட்டஈடும் வேண்டாம் மரணச்சான்றிதலும் வேண்டாம், வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே?பாடசாலை மாணவரும் தமிழரின் பிள்ளைகளும் பயங்கரவாதிகளா? என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்! எங்கே எங்கே உறவுகள் எங்கே! சர்வதேசமே பதில் கூறு என்ற கோஷங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தை முன்னெடுத்த உறவுகள் எத்தடை வரினும் தமது உறவுகள் தமக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தமக்கான நீதியினை பெற்றுத்தர அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் .

குறித்த போராட்டத்தில் அதிகளவான புலனாய்வாளர்கள் வருகைதந்து போராட்டக்காரர்களை வீடியோ புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்படடமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை