சஹ்ரானின் பிரச்சார வகுப்புகளில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் நாரம்மலையைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 வயதான குறித்த நபர், தலுபொத்த - கொச்சிகடை பகுதியில் வசித்து வந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.
குறித்த நபர் 2018 - 2019 காலப்பகுதியில் சஹ்ரானின் வகுப்புகளில் கலந்து கொண்டதுடன் , கொள்கை நிலைப்பாட்டுக்கான சத்தியப் பிரமாணமும் அவர் செய்திருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.