சிறைக்கைதிகளை ஏற்றி சென்ற பஸ்வண்டி- துவிச்சக்கரவண்டியுடன் மோதியதில் முதியவர் ஸ்தலத்திலே பலி


மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி கறுவாக்கேணி சந்தியில் சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற இருபஸ்வண்டிகள் துவிச்சக்கரவண்டியில் பிரயாணித்த ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பிரயாணித்த 60 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று
06-07-2021ஆம் திகதி  மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய தில்லைநாயகம் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலநறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இரு சிறைக் கைதிகளை ஏற்றிக்கொண்டு இரு பஸ்வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக சம்பவதினமான இன்று மாலை 4 மணியளவில் பிரயாணித்தபோது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாக்கேணி சந்தி பகுதியில் துவிச்சக்கரவண்டியில் வீதியில் பிரயாணித்த முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளளார்.

அதில் சிறைச்சாலை பஸ்வண்டிசாரதி ஒருவரை கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனார்.
புதியது பழையவை