அழிவை தவிர்க்க முடியாதது - பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை




இலங்கையில் டெல்டா மாறுபாடு பரவாமல் தடுக்க அரசாங்கம் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

டெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள புதிய செயல் திட்டம் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே பல பகுதிகளில் பரவியிருக்கும் இந்திய மாறுபாடு நாட்டில் அதிகமான பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்பதை தீர்மானிக்க சரியான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது.

இந்த நிலையில் அரசாங்கம் நிலைமையை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் ஒரு பெரிய அழிவு தவிர்க்க முடியாதது என்று உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.

அரசாங்கம் டெல்டா பரவலை தடுக்க எச்சரிக்கையுடன் இருப்பதாக கூறுகின்ற போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மறுபுறத்தில் கோவிட்டின் ஆபத்து சமூகத்திலிருந்து மறைந்துவிட்டதைப் போல மக்கள் நடந்துகொள்கிறார்கள். எனினும் ஆபத்து இன்னும் இருக்கிறது என்று உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை