நவீன வசதிகள் கொண்ட உள்நாட்டு விமான நிலையமாக மட்டக்களப்பு விமான நிலையம் விரைவாக உருவாக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இன்று 01-07-2021ஆம் திகதி காலை விமான நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், கிழக்கு மாகாணத்தை சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் போது மட்டக்களப்பு விமான நிலையத்தை சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிகரமான பயண இடமாக உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
1958 ஆம் ஆண்டில் விமானத் திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் 1983 ஆம் ஆண்டில் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது (2012) மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதை மேம்படுத்தப்பட்டு உள்நாட்டு விமான நிலையமாக செயற்படத் தொடங்கியது.
2018 ஆம் ஆண்டில் 3980 பயணிகளையும், 2019 ல் 3373 ஆகவும், 2020 இல் 723 பயணிகளையும் மட்டக்களப்பு விமான நிலையம் கையாண்டது. 2018 இல் 1180, 2019 இல் 864 மற்றும் 2020 இல் 174 விமானங்கள்தரையிறங்கியிருந்தன.