டெல்டா வைரஸ் கடும் அச்சுறுத்தல்!


டெல்டா மாறுபாடு வேகமாக பரவும் என்பதால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர, டெல்டா மாறுபாடு, இன்னும் பரவக்கூடியது என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க சதவீதமனோருக்கு முழுமையாக தடுப்பூசி போடும் வரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். 

இதேவேளை கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை