சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமாகிய கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் இன்று (25) காலை காலமானார்.
கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.