ஜனாதிபதி கோட்டாபயவின் உடனடி உத்தரவு


நீர்கொழும்பு, கொச்சிக்கடையிலுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இராஜாங்க அமைச்சர் நிமால் லான்சாவுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதன்படி நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று (12) கொச்சிகடை பகுதிக்கு நேரில் விஜயம் செய்தார்.

கொச்சிக்கடை நகர எல்லையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, முதற்கட்டமாக கொச்சிக்கடை பாலத்திலிருந்து கொழும்பு நோக்கி ஒரு கிலோமீட்டர் தூரத்தைக்கொண்ட பாதையை நான்கு வழிப்பாதைகளாக அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகர எல்லை மூன்றரை கிலோமீட்டர் நீளமானது, இதனை நான்கு பாதைகளின் கீழ் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக, அதிக நெரிசலான ஒரு கிலோமீட்டர் நீளம் நான்கு பாதைகளாக அகலப்படுத்தப்படும்.
நான்கு பாதைகளாக அகலப்படுத்த இலங்கை வர்த்தக சம்மேளம் ஒப்புக் கொண்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் 100 கி.மீ தூரத்தின் அபிவிருத்தி ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.
புதியது பழையவை